“ஒழுங்கா வேலைய பாரு இல்லேன்னா போய் வீட்டை பாரு”அதிகாரி திட்டியதால் தற்கொலை செய்த பெண் போலீஸ்..

 

“ஒழுங்கா வேலைய பாரு இல்லேன்னா போய் வீட்டை பாரு”அதிகாரி திட்டியதால் தற்கொலை செய்த பெண் போலீஸ்..

இன்று இருக்கும் சூழலில் அனைவருமே கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் .அதுவும் பெண் போலீசுக்கு சொல்லவே வேண்டாம் .இப்படித்தான் ஒரு பெண் போலீசுக்கு அலுவலக உயர் அதிகாரியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

“ஒழுங்கா வேலைய பாரு இல்லேன்னா போய் வீட்டை பாரு”அதிகாரி திட்டியதால் தற்கொலை செய்த பெண் போலீஸ்..

நொய்டாவில் கவுதம புத்த நகர் மாவட்டத்தின் மோர்னா பகுதியில் இருக்கும் 29 வயதான பெண் போலீஸ் பருல் .அவர் தன்னுடைய கணவர் அமித் குமார் மற்றும் குழந்தையோடு வசித்து வந்தார் .அந்த பெண் போலீஸ் பருளுக்கு அவரின் மேலதிகாரியால் வேலையில் சில பிரச்சினைகள் இருந்துள்ளன .அதனால் அவருக்கு அதிகாரியிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது .அந்த நோட்டீஸில் ,தினமும் மூன்று மணி நேரம்தான் பணிசெய்வதாகவும் ,சக ஊழியர்களிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும் ,அதனால் பணியை ஏன் ஒழுங்காக செய்யவில்லை என்று விளக்கம் கேட்டுள்ளனர் .

“ஒழுங்கா வேலைய பாரு இல்லேன்னா போய் வீட்டை பாரு”அதிகாரி திட்டியதால் தற்கொலை செய்த பெண் போலீஸ்..இதனால் கடும் மன உலைச்சலில் இருந்த அவர் திங்கள்கிழமை காலையில் வீட்டில் கணவரை குழந்தையை பார்த்துக்க சொல்லிவிட்டு பாத்ரூம் சென்றார் .உள்ளே சென்ற அவர் அங்கு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .பாத்ரூம் போன மனைவியை நீண்ட நேரம் காணாத கணவர் உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கு போட்டுருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார் .விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்து வருகிறார்கள் .