darbar
  • January
    22
    Wednesday

Main Area

Main



கமல்ஹாசன் முன்பு திரிஷாவாக மாறி கேள்வி கேட்ட லாஸ்லியா 

லாஸ்லியா
லாஸ்லியா

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே  கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். அதில் நேற்று மதுமிதா காப்பாற்றப்பட்டதாகக் கமல்ஹாசன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன், லாஸ்லியாவிடம் கடந்த வாரம் நடந்த போடு ஆட்டம் போடு டாஸ்க் குறித்து உரையாடுகிறார். 

அப்போது லாஸ்லியா, திரிஷா போல் கமல்ஹாசனிடம் பேசுகிறார். அவர் கூறியதாவது, 'ஹாய் கமல் சார்... நான் திரிஷா. உங்களுடன் இணைந்து மன்மத அம்பு படத்தில் நடித்துத்திருக்கிறேன். அப்போது அதில் நீண்ட வானம் பாடல் ரொம்ப வித்தியாசமாக இருக்கும், அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க' என்று கேட்க. 

உடனே கமல்ஹாசன், 'இன்னும் நீங்கள் காதல் moodயில் இருந்து அகலவில்லை' என்று லாஸ்லியாவிற்கு பல்பு கொடுப்பது போல் கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.