Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் #NoBraDay இந்த மாதிரியான பெண்கள் நைட்ல மட்டும் இல்ல; பகல்லயும் பிரா இல்லாம இருக்கலாம்!

#NoBraDay இந்த மாதிரியான பெண்கள் நைட்ல மட்டும் இல்ல; பகல்லயும் பிரா இல்லாம இருக்கலாம்!

ல்லாத்தையும் கழற்றி வீசிட்டு லுங்கிக்கு மாறும் போது ஆண்கள் எத்தனை அலாதியான சுகத்தை அனுபவிக்கிறார்களோ அப்படித்தான் நைட்டிக்கும் மாறும் பெண்களும். இந்த சுதந்திரம் இரவில் மட்டும்தான் கிடைக்கிறது. பொதுவாகவே சுதந்திரம் என்றாலே இரவில்தான் கிடைக்கும் போலிருக்கிறது என்று தோணும். அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடக்கூடாது. ஆனால், இன்று(13,அக்டோபர்) ஒருநாள் மட்டும் நாள் முழுவதும் பெண்கள் பிரா அணியாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

’நோ பிரா டே’வுக்காகத்தான் இந்த அறிவுறுத்தல். இது சுதந்திரத்துக்கான அறிவுறுத்தல் அல்ல; சுகாதாரத்துக்கான அறிவுறுத்தல். பிரா இல்லாமல் சுதந்திரமாக இருப்பதால் இது கொண்டாட்ட தினம் அல்ல; ஒரு வலியை உணரவைக்கும் தினம்.

தவறான கண்ணோட்டம்:
ஆண்டுக்கு ஒரு நாள் முழுவதும் பிரா அணியாமல் இருக்க வேண்டும் என்பது ஏன்? இதற்கெல்லாம் ஒரு தினமா? என்ற கேள்விதான் பலருக்கும் எழும். ஆனால், இதன் காரணத்தை கவனத்தில் கொண்டால் அந்த தினத்தில் இருக்கும் வலி புரியும்.
இறுக்கமாக பிரா அணிவதால் புற்றுநோய் உண்டாகிறதென்றும், அதற்கான விழிப்புணர்வு தினம்தான் அக்டோபர்-13ஆம் தேதி ‘நோ பிரா தினம்’ அனுசரிக்கப்படுவதாகவும் தவறான தகவல் பரவுகிறது. உண்மையில், பிரா அணிவதற்கும் புற்றுநோய் வருவதற்கும் சம்பந்தமில்லை என்றே மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பிரா அணிவதால் புற்றுநோய் வருவதென்னது ஒருசதவிகிதம் மட்டுமே என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வலி உணரவைக்கும் வழி:

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மார்பகங்களை அறுவை சிகிச்சையில் இழக்க நேரிடும். அத்தகைய பெண்கள் செயற்கையான மார்பகங்கள் பொருத்திக்கொள்கின்றனர். இது தெரியாமல் இருக்க, இதற்காகவே அவர்கள் எப்போதும் பிரா அணிய வேண்டிய சூழல் இருக்கிறது.

உடலில் ஒரு பிரச்சனை என்பதால் அந்த உறுப்பை அகற்றிவிட்டோம். இதில் மற்றவர்கள் தவறாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது? என்பதை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணர்த்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே, அக்டோபர் 13ம் தேதி அன்று ஒருநாள் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பிரா அணியாமல் இருக்க வேண்டும் என்ற விழுப்புணர்வு ஆண்டுதோறும் தொடர்கிறது.

அது ஏன் அக்டோபர்-13?

கடந்த 2011ம் ஆண்டில் இருந்து ‘நோ பிரா டே’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டில் ஜூலை மாதம் 9ம் தேதி தான் நோ பிரா டே தினமாக அனுசரிக்கப்பட்டது. அதற்கடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான அக்டோபர் -13ம் தேதி நோ பிரா டே அனுசரிக்கப்படுவதுதான் சரியானது என்று முடிவெடுக்கப்பட்டு அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

BRA
பொதுவாக பெண்களின் மார்புகச்சைக்கு பிரா என்று சொன்னாலும், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை குறிக்கும் விதமாக BRA -Breast Reconstruction Awareness என்பதை கருத்தில் கொண்டு பிரா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. #NoBraDay என்ற ஹேஸ்டேக்கும் இந்த நாளில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல மட்டும்தானா?

மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல மட்டும் இந்த தினம் அல்ல. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பெண்கள் அடையவேண்டும் என்பதற்காகவும் இந்த தினம். மேலும், பிரா அணிவதிலும் கூட பெண்களுக்கு புரிதல்கள் இல்லாமல் இருக்கிறது. அதுகுறித்த புரிதல்கள் அவர்களுக்கு வரவேண்டும் என்பதற்காவும் இந்த தினம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பிராவை இறுக்கமாக அணியக்கூடாது. அதே நேரத்தில் தொய்வாகவும் அணியக்கூடாது. சரியான அளவில் அணிய வேண்டும். தவறான அளவுகளில் பிரா அணிவதால் மார்புகளின் கீழ் கறுப்பாக மாறிவிடும். அதுமட்டுமல்ல சரியான சைஸ் பிரா அணியாவிட்டால், தோள் பட்டை வலி, முதுகு வலி வரலாம்.

36 சைஸ் உ ள்ள பெண்கள் எலாஸ்டி பிராவை தவிர்த்து விடவேண்டும். இல்லையென்றால் இன்னும் தளர்வடைந்துவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இரவில் மட்டுமல்ல பகலிலும்…

முதலில் ஆரம்பித்த விசயத்திற்கே வருவோம். இரவில் பிரா இல்லாமல் சுதந்திரமாக இருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, பிரா இல்லாமல் தூங்கலமா என்ற சந்தேகமும் நிறைய பெண்களுக்கு இருக்கிறது.


இரவிலாவது சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த சுதந்திரத்தை அனுபவிப்பதில் தவறில்லை என்றே சொல்கிறது ஆய்வுகள். 34 மற்றும் அதற்கு மேலான சைஸ் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தளர்ந்து போயிருப்பதால் இதற்குமேலும் தளராமல் இருப்பது நல்லது என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் பிரா அணிந்து தூங்கலாம். சிறிய மார்பகம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. இரவில் மட்டும் அல்ல; வீட்டில் இருக்கும் போது பகலிலும் கூட அவர்கள் பிரா இல்லாமல் இருக்கலாம். அதனால் ஒன்றும் பிரச்சனை வரப்போவதில்லை.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!