யாருமே எதிர்த்து பேச மாட்டேங்குறாங்க..போரடிக்குது – உதயநிதி

யாருமே எதிர்த்து பேச மாட்டேங்குறாங்க..போரடிக்குது – உதயநிதி

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு புதுக்கோட்டையில் திமுக இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உதயநிதி பேசியபோது, சட்டமன்றத்தில் நாங்கள் எல்லாம் போய் உட்கார்ந்து இருக்கிறோம். எங்களால் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை.. போரடிக்குது என்றார்.

யாருமே எதிர்த்து பேச மாட்டேங்குறாங்க..போரடிக்குது – உதயநிதி

அவர் அப்படி சொன்னதைக்கேட்டதும் கூட்டத்தினர் சிரித்தனர். பின்னர் பேசிய உதயநிதி, நான் ஏன் அப்படி சொல்றேன் என்றால் யாருமே எதிர்த்து பேச மாட்டேன் என்கிறார்கள் என்று போரடிப்பதற்கான காரணத்தினை சொன்னார்.

யாருமே எதிர்த்து பேச மாட்டேங்குறாங்க..போரடிக்குது – உதயநிதி

பின்னர் பேசிய உதயநிதி, அதிமுகவின் எஸ். பி. வேலுமணி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் எல்லாரும் நம்மைப் பாராட்டி பேச ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவிற்கு நமது அரசினுடைய செயல்பாடுகள் இருக்கின்றன. இதேபோல் முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருந்தால் அடுத்த 5 வருடங்களுக்கு ஓட்டு கேட்கவே தேவையில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

யாருமே எதிர்த்து பேச மாட்டேங்குறாங்க..போரடிக்குது – உதயநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 13-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது அனுபவங்களை பேசினார்.