#NobelPeacePrizeForImranKhan: இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வேண்டும் பாகிஸ்தானிகள்

 

#NobelPeacePrizeForImranKhan: இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வேண்டும் பாகிஸ்தானிகள்

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான பகையை வளர்க்காமல் அமைதி வேண்டி அபிநந்தனை விடுதலை செய்த இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான பகையை வளர்க்காமல் அமைதி வேண்டி அபிநந்தனை விடுதலை செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான பகை வளர்ந்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பாகிஸ்தானில் இருப்பது தெரிந்தும் அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியது இந்திய அரசாங்கம். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதி என்று பாலகோட் உள்ளிட்ட சில பகுதிகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு இரு நாட்டு விமானப்படையும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பாகிஸ்தான் விமானம் ஒன்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது, அதேபோல் பாகிஸ்தானும் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதில் அபிநந்தன் எனும் விமானி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் இரு நாட்டுக்கும் இடையே போர் நிகழும் சூழலை ஏற்படுத்தியது.

மனிதம் வேண்டுபவர்கள் போர் வேண்டாம் என குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் பாராளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான், அமைதி வேண்டி அபிநந்தனை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். இந்த முடிவை பாராளுமன்றத்தில் இருந்த அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதன்படி அபிநந்தனும் இன்று விடுதலை செய்யப்பட்டு இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிகழ்வதை தடுக்க சாதுரியமாய் செயல்பட்ட இம்ரான் கானுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தானிகள் பதிவு செய்து வருகின்றனர்.

#NobelPeacePrizeForImranKhan என்ற வாசகத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்துள்ளார்கள்.