“அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே சம்பளம்” – வெளியானது அதிரடி அறிவிப்பு!

“அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே சம்பளம்” – வெளியானது அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்று ஒட்டுமொத்த உலகின் இயக்கத்தையே மாற்றியமைத்துள்ளது. எங்கு சென்றாலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம். மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என கண்டிப்புடன் நடந்துகொண்டால்தான் கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ். இது ஒரு பாஸ்போர்ட்டாகவே உருமாறியிருக்கிறது.

“அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே சம்பளம்” – வெளியானது அதிரடி அறிவிப்பு!

சமீபத்தில் ஐரோப்பா நாடுகள் கோவிஷீல்டு போட்டுக்கொண்ட சான்றிதழ் வைத்திருந்தாலும் எங்கள் நாட்டுக்குள் நுழையவிட முடியாது என கறார் காட்டினர். அதேபோல பெரும்பாலான நிறுவனங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை அனுமதிப்பதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் கொரோனா தடுப்பூசி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அது இல்லாமல் உங்களால் எங்கேயும் செல்ல முடியாத நிலைமையும் கூடிய விரைவில் வரக்கூடும்.

“அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே சம்பளம்” – வெளியானது அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்டாலுமே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. நிலைமை இப்படியிருக்க ஒரு டோஸ் கூட போடாதவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது. மிக முக்கியமாக மக்கள் சேவையாற்றும் மக்களுடன் அதிகமாக புழங்கும் அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருசில நாடுகளிலும், இந்தியாவில் ஒருசில மாநில அரசுகளும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் சம்பளம் கொடுக்க முடியாது என எச்சரித்துள்ளன.

“அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே சம்பளம்” – வெளியானது அதிரடி அறிவிப்பு!

அந்த வகையில் தற்போது புதுச்சேரி யுனியன் பிரதேச துணைநிலை ஆளுநரும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் கூறியுள்ளார். முன்னதாக கடந்த மாதமே இதற்கான எச்சரிக்கையை விடுத்திருந்தார். கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால்தான் கல்வி நிலையங்களில் கூட சேர முடியும் என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதாக அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.