தடுப்பூசி பற்றாக்குறை- சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்கள் நாளை இயங்காது

 

தடுப்பூசி பற்றாக்குறை- சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்கள் நாளை இயங்காது

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை[19-7-2021] சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்கள் இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Image

கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் காலை முதலே வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். சென்னையில் கொரோனா தொற்றை குறைப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நாளை தடுப்பூசி மையங்கள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி வந்ததும், விரைவில் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு அனுப்பிய பின் தடுப்பூசிகளை செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் தர வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சில நாட்களாக கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.