Home தொழில்நுட்பம் "இதை விசாரிக்க அப்படி ஒன்னும் அவசரமில்லையே" - வாட்ஸ்அப்புக்கு எதிரான வழக்குகள் மீது டெல்லி ஹைகோர்ட் கருத்து!

“இதை விசாரிக்க அப்படி ஒன்னும் அவசரமில்லையே” – வாட்ஸ்அப்புக்கு எதிரான வழக்குகள் மீது டெல்லி ஹைகோர்ட் கருத்து!

டிஜிட்டல் தளங்களில் கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பின் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. புதிய கொள்கைகளை அதன் பயனர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிப்ரவரி 8ஆம் தேதிக்குப் பின் அவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்ற தகவலை வாட்ஸ்அப் நிர்வாகம் விடுத்தது. பயனர்களின் தரவுகளைப் பேஸ்புக் போன்ற மூன்றாம் தர நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதே அக்கொள்கையின் பிரதான நோக்கம்.

"இதை விசாரிக்க அப்படி ஒன்னும் அவசரமில்லையே" - வாட்ஸ்அப்புக்கு எதிரான வழக்குகள் மீது டெல்லி ஹைகோர்ட் கருத்து!
WhatsApp to Delhi HC: No deferment of privacy policy, trying to get users  on board

இதனால் தங்களது ரகசியங்கள் கசியக் கூடும் என்று உணர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் அதனை டெலிட் செய்து சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு தாவினர். இதனால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் இழந்தது. இதனை உடனே சரிசெய்ய புதிய தனியுரிமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தேதியை மே மாதம் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் எதுவும் பகிரப்படாது என்று உறுதியளித்தாலும் பயனர்கள் நம்ப தயாராக இல்லை. இப்போதும் திருத்தப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனர்களை வற்புறுத்தி வருகிறது.

WhatsApp vs Govt Of India: How It Affects You? - DKODING

இதனிடையே இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான கடந்த விசாரணையில் மத்திய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், “மத்திய அரசு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை (Personal Data Protection Bill) சட்டமாக்குவதற்குள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என வாட்ஸ்அப் துடிக்கிறது. இதற்காக பயனர்களை ஏமாற்றி கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தது.

மத்திய அரசின் கடும் எதிர்ப்பால் பணிந்த வாட்ஸ்அப்… பயனர்களை வற்புறுத்த மாட்டோம் என உறுதி!

இச்சூழலில் இந்த மனு ஜூலை 9ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துவதை தாமாக முன்வந்து நிறுத்திவைப்பதாகவும், மத்திய அரசு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் வரை காத்திருப்பதாகவும் வாட்ஸ்அப் கூறியது. அதேபோல அதுவரை பயனர்களை கொள்கையுடன் உடன்படுங்கள் என கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

WhatsApp forces users to accept new terms of service, privacy policy


இதற்கு முன்னதாக கடந்த மே மாதம், இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் எந்தவிதத்திலும் யாரிடமும் பகிரப்படாது என்றும், பாதுகாக்கப்படும் எனவும் மத்திய அரசிடம் வாட்ஸ்அப் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், “மத்திய அரசின் தரவுகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறும் வரை தரவுகளை பேஸ்புக்கிற்கு மாற்ற மாட்டோம் என வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது. தனியாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த மனுக்களை விசாரிக்க அவசரமில்லை. ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது” என்றனர்.

"இதை விசாரிக்க அப்படி ஒன்னும் அவசரமில்லையே" - வாட்ஸ்அப்புக்கு எதிரான வழக்குகள் மீது டெல்லி ஹைகோர்ட் கருத்து!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்

சக அதிகாரியால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரியை வன்கொடுமை செய்த சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
TopTamilNews