தமிழ்நாட்டில் உள்ள 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை!

 

தமிழ்நாட்டில் உள்ள 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை!

தமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டிருந்தனர். கணக்கெடுப்பு பணி முடிவில், தமிழ்நாடு முழுவதும் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை!

கழிப்பறை வசதி இல்லாத 2,391 அரசுப் பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறையிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே 2,391 அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை உருவாக்க அப்பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, இட வசதி, அருகாமையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை சேகரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. விவரங்களை jdssed@nic.in என்ற மின்னஞ்சலுக்கு விரைந்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.