தெலுங்கனாவில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து! அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு

 

தெலுங்கனாவில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து! அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கு என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதே போல பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தேர்வை ஒத்திவைக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல, ஆசிரியர்கள் சங்கமும் தேர்வை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் பொதுத்தேர்வை நடத்தியே தீருவோம் என தமிழக அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

தெலுங்கனாவில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து! அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு

இந்நிலையில் தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு இல்லாமல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கொரோனா பரவல் காரணமாக தற்போது தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.