ஐபிஎல் போட்டியில் விதிமுறைகள் மாற்றம்!

 

ஐபிஎல் போட்டியில் விதிமுறைகள் மாற்றம்!

ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

வழக்கமாக ஐசிசியின் விதிமுறைகளின் படியும் , அதில் சில விதிகளில் ஒரு சில மாற்றங்களுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும்.இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மூன்று முக்கியமான விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

ஓவர் ரேட் ரூல்

    புதிய விதிகளின் படி பந்துவீசும் அணி 20 ஓவரை 90 நிமிடங்களுக்குள் வீசி இருக்க வேண்டும் , இதில் ஐந்து நிமிடம் டைம் அவுட் நேரமும் சேர்த்து அடக்கம். பழைய விதிமுறைகளின்படி 90 நிமிடங்களுக்குள் 20ஆவது ஓவரை வீச துவங்கியிருக்க வேண்டும் என இருந்தது. இதில் பேட்டிங் செய்யும் அணி வேண்டுமென்றே நேரத்தை விரயமாக்கினால், நடுவர்கள் அந்த நேரத்தை பேட்டிங் அணி பந்து வீசும் போது அந்த 90 நிமிடத்தில் இருந்து குறைத்துக்கொள்வர். இரண்டு போட்டியில் 90 நிமிட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால் அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவார்.

சாப்ட் சிக்னல்

இனி சந்தேகப்படும்படியான கேட்ச்களுக்கு கள நடுவர் முடிவு எடுக்க இயலாது, சந்தேகப்படும் படியான கேட்ச்களுக்கு இனி மூன்றாவது நடுவர் தொலைக்காட்சி மூலம் கண்காணிப்பார். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது.
ஐபிஎல் போட்டியில் விதிமுறைகள் மாற்றம்!

ஷார்ட் ரன் ஓவர் ரூல்

பேட்ஸ்மேன் ரன் ஓடும்போது மறுமுனையில் உள்ள கோட்டை தொட்டுவிட்டு சென்றாரா இல்லையா என மூன்றாவது நடுவரிடம் கேட்கலாம். கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி,பஞ்சாப் அணிகள் இடையேயான ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் ஜோர்டன் 2 ரன்களுக்கு சரியாக ஓடினார். ஆனால் கள நடுவர் ஒருமுனையில் கோட்டை சரியாக தொடவில்லை என ஒரு ரன்னை ரத்து செய்தார். இறுதியில் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது. அந்த ஒரு ரன் கொடுக்கப்பட்டிருந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும்,அந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். இதனால் இந்த புதிய விதியின்படி கள நடுவர் ரன்னை ரத்து செய்தால்,அதை மறுபரிசீலனை செய்ய அணிகள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடலாம் என கொண்டுவரப்பட்டுள்ளது.