ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் இல்லை : விக்கிரமராஜா அறிவிப்பு

 

ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் இல்லை : விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னையில் கொரோனா வைரஸ் பெருமளவு பரவியதற்கு முக்கிய காரணமான கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பதிலாக திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. கோயம்பேடு அளவிற்கு திருமழிசையில் வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் 30 ஆம் தேதி தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்ட போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் இல்லை : விக்கிரமராஜா அறிவிப்பு

அப்போது கோயம்பேடு மார்க்கெட்டை திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தியும் பிற மாவட்டங்களில் மூடப்பட்டிருக்கும் மார்கெட்டுகளை திறக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 4 ஆம் தேதி, போராட்டம் குறித்து சென்னை புரசைவாக்கத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக விக்கிரமராஜா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் திதி கடையடைப்பு போராட்டம் இல்லை என வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கோயம்பேடு சந்தையை திறக்க விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்ததால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் இந்துக்கள் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி வருவதால் போராட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடத்தப்படாது என்றும் தெரிவித்தார்.