“கொரோனா தடுப்பூசிக்கு நோ சொன்னால் சம்பளம் கட்” – அதிரடி உத்தரவு

 

“கொரோனா தடுப்பூசிக்கு நோ சொன்னால் சம்பளம் கட்” – அதிரடி உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதன் பலனாக பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கியிருக்கிறது. ஊரடங்கு தொடர்ந்து போட்டுக் கொண்டே இருந்தால் மிகப்பெரும் பிரச்சினைகள் உருவெடுக்கும். குறிப்பாக பொருளாதாரம் கடுமையாக அடிவாங்கும். ஆகவே நீண்ட கால தீர்வாக அனைவரும் தடுப்பூசியைத் தான் முன்வைக்கிறார்கள். இந்தியாவில் ஒருபுறம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவினால், மறுபுறம் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.

“கொரோனா தடுப்பூசிக்கு நோ சொன்னால் சம்பளம் கட்” – அதிரடி உத்தரவு

உலக நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. சீனா போன்ற நாடுகளில் மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். உணவகங்களில் இலவச உணவு, மதுபானக் கடைகளில் இலவசமாக பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளன. குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் பார்களில் கஞ்சா இலவசமாக கொடுக்கப்படுகிறது. தொற்று வீரியாமாக இருக்கும் முக்கிய நகரங்களில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் குழந்தைகளின் கல்வி, சொந்தமான வீடுகளைப் பறித்துவிடுவோம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குப் பயந்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.

“கொரோனா தடுப்பூசிக்கு நோ சொன்னால் சம்பளம் கட்” – அதிரடி உத்தரவு

இங்க சைலன்ஸ கூட சத்தமா தான் சொல்ல வேண்டியிருக்கு என்பது போல தடுப்பூசி மக்களின் நல்லதுக்கு தான் என்றாலும் கட்டாயப்படுத்த வேண்டிய சூழல் அரசுகளுக்கு எழுந்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கரேலா பெந்த்ரா மார்வாகி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் நலத் துறையின் துணை ஆணையர் கேஎஸ் மஸ்ராம் தனது ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். அதன்படி மாவட்டதிலுள்ள பழங்குடியின நலத்துறை அலுவலங்கள், விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான சான்றிதழையும் சமர்பிக்க வேண்டும்.

“கொரோனா தடுப்பூசிக்கு நோ சொன்னால் சம்பளம் கட்” – அதிரடி உத்தரவு

அப்படி இல்லையென்றால் அடுத்த மாதத்திற்கான சம்பளம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதுவரை போடாத ஊழியர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவரின் உத்தரவுக்குப் பயந்து 95 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறப்படும்கிறது. இது சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாகப் பேசிய மஸ்ராம், ஊழியர்களும் பிற அதிகாரிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே என்னுடைய ஒரே நோக்கம் என்றார். அதேபோல ஊழியர்களின் குடும்பத்தாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார் மஸ்ராம்.