கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை?

 

கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு 21ஆம் தேதி முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் தளர்வுகள் அளிப்பது குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா பாதிப்பு குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை?

அக்கூட்டத்தில் பாதிப்பு குறையாத 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என்றும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நோய்தொற்று குறையாத மாவட்டங்களில் மேலும் தளர்வுகளை அளிக்க வேண்டாம் என்றும் தளர்வுகள் வழங்கினால் நோய் பரவல் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மருத்துவ வல்லுநர்கள் குழுவின் பரிந்துரையை கேட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன் முடிவில் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தளர்வின் போது பேருந்து சேவை, கோவில்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுமதி வழங்கவுள்ளதாக தெரிகிறது.