Home விளையாட்டு கிரிக்கெட் ரெய்னா இல்ல... ஹர்பஜன் இல்ல... தோனி படையின் யாரெல்லாம் இருக்கா? #CSK

ரெய்னா இல்ல… ஹர்பஜன் இல்ல… தோனி படையின் யாரெல்லாம் இருக்கா? #CSK

ஐபிஎல் கொண்டாட்டங்களின் உச்சமாக போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது. நேற்றிலிருந்து ரசிகர்கள் எந்த அணியோடு எந்த அணி என்றைக்கு மோத விருக்கிறது என்று பார்த்து தேதிகளைக் குறித்து வைக்கத் தொடங்கி விட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் எதிரணியோடு மோதவிருக்கிறது. மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணி இது.

இந்த ஆண்டில் பல முன்னனி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கோப்பையை வெல்லும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் வீரர்களுக்கு சோதனை மேல் சோதனையாக இருந்துவருகிறது.

suresh raina

கொரோனா டெஸ்ட் முடிந்து சென்னையில் ஆகஸ்ட் 15 முதல் 20 –ம் தேதி வரை நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஜடேஜா, ஜர்பஜன் சிங் ஆகியோர் பயிற்சிக்கு வரவில்லை.

சுரேஷ் ரெய்னா முதல் நபராக பயிற்சிக்கு வந்தார். ஆனால், ஐக்கிய அமீரகத்திற்கு சென்றதும் சொந்த காரணங்களால் போட்டியிலிருந்து விலகினார். அதேபோல ஹர்பஜன் சிங்கும் விலகினார். இதனால் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைக்கின்றனர்.

சரி, சின்ன தல ரெய்னாவும் இல்லை…. சுழற்பந்து மன்னன் ஹர்பஜன் சிங்கும் இல்லை… வேறு யாரெல்லாம் தோனியின் படையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

கேப்டன் மஹேந்திர சிங் மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்த அணித்தலைவர். 190 போட்டிகளில் ஆடி, 4432 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 23 ஐம்பதுகள் அடக்கம்.

ராய்டு: விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 17 போட்டிகளில் ஆடி 282 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் மொத்தம் 3300 ரன்களைக் குவித்துள்ளார்.

கே.எம்.ஆசிஃப்: ஆல்ரவுண்டரான இளம் வீரர். இரண்டு ஐபிஎல் மேட்சில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தீபக் சாஹர்: பந்துவீச்சாளரான இவர்ம், 17 மேட்ச்களில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இம்ரான் தாஹிர்: ரஜினி டயலாக்கோடு உற்சாக இந்த ஐபிஎல் போட்டிக்கு தயாராகியுள்ளார். இவர் ஐபிஎல் போட்டி வரலாற்றில் 55 மேட்ச்களில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஷேன் வாட்சன்: ஆஸ்திரேலிய வீரான இவர் ஆல்ரவுண்டர். ஐபிஎல் போட்டிகளில் 134 போட்டிகளில் ஆடி, 3575 ரன்கள் குவித்துள்லார். இதில் 4 சதங்களும் உள்ளடக்கம்.  பந்துவீச்சில் 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பிராவோ: ஆல்ரவுண்டரான இவர், 134 போட்டிகளில் ஆடி, 1483 ரன்களைக் குவித்துள்ளார். 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரவிந்திர ஜடேஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான இவர் ஆல்ரவுண்டர். 170 போட்டிகளில் ஆடி, 1927 ரன்கள் எடுத்துள்ளார். 108 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

முரளி விஜய்: நட்சத்திர பேட்ஸ்மேனான இவர் 103 போட்டிகளில் ஆடி, 2587 ரன்களைக் குவித்துள்ளார். இவற்றில் 2 சதங்களும், 13 ஐம்பதுகளும் அடக்கம்.

கேதர் ஜாதவ்: ஆல்ரவுண்டரான இவர் 79 போட்டிகளில் ஆடி, 1079 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 ஐம்பதுகளும் அடக்கம்.

டூ பிளேசி: ஆல்ரவுண்டரான இவர், 71 போட்டிகளில் ஆடி, 1853 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 ஐம்பதுகளும் அடக்கம்.163 ஃபோர்களும்,  59 சிக்ஸர்களும் விளாசியிருக்கிறார்.  

ருத்ராஜ் கைக்கவாட்: புது வீரான ருத்ராஜ் பலரின் எதிர்பார்ப்புகள் இவர் மீது இருக்கிறது.

கார்ன் ஷர்மா: ஆல்ரவுண்டரான இவர், 62 போட்டிகளில் ஆடி, 54 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இவர்கள் உள்ளிட்டோர் கொண்ட வீரர்களோடு தோனி படை ஐபிஎல் போட்டியில் களம் இறங்குகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...

3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...
Do NOT follow this link or you will be banned from the site!