நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது! – அரசு அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது! – அரசு அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது கேள்வி நேரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மக்களவை வருகிற 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றக் கூட்டம் அவசர

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது! – அரசு அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

அவசரமாக முடிக்கப்பட்டது. கொரோனாத் தொற்று குறையாத நிலையில், ஆறு மாதத்துக்கு ஒரு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டியாக வேண்டும் என்பதால் செப்டம்பர் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் அலுவலர் நேரம் தொடர்பாக மக்களவை செயலகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடும் முதல் நாளான செப்டம்பர் 14ம் தேதி மக்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். அதன் பிறகு 15ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு ஏழு மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது! – அரசு அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக கூட்டத்தில் பங்கேற்பவர் கூட்டம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு உள்ளாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவைக் காட்ட வேண்டும். சீரோ ஹவர் எனப்படும் கேள்வி நேரம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு வாய்பில்லாத வகையில் அரசு செயல்பட்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.