பாரசிட்டமால் மாத்திரை வாங்க மருத்துவ பரிந்துரை தேவை இல்லை – தமிழக அரசு தகவல்

 

பாரசிட்டமால் மாத்திரை வாங்க மருத்துவ பரிந்துரை தேவை இல்லை – தமிழக அரசு தகவல்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் மருந்தகங்களில் தற்போது பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை. அதாவது கொரோனா அறிகுறியை அறியாமல் மக்கள் பாரசிட்டமாலை பயன்படுத்துவார்கள் என்ற நோக்கில் இந்த மருந்து வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பாரசிட்டமால் மாத்திரை வாங்க மருத்துவ பரிந்துரை தேவை இல்லை – தமிழக அரசு தகவல்

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஜோயல் குமார் என்பவர் பாரசிட்டமால் மாத்திரையை மருந்தகங்களில் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில், பாரசிட்டமால் மாத்திரைகளை பெறுவதற்கு மருத்துவர்களின் பரிந்துரை தேவை இல்லை என்றும் இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்துள்ளனர்.