ஒத்திவைப்பு இல்லை… நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

ஒத்திவைப்பு இல்லை… நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

நீட், ஜெ.இ.இ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுக்க கோரிக்கை எழுந்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

ஒத்திவைப்பு இல்லை… நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

கொரோனா பாதிப்பு, நாடு முழுவதும் வெள்ள பாதிப்பு உள்ள நிலையில் நீட், ஜெ.இ.இ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. ஆனால், மத்திய அரசு விடாப்பிடியாக தேர்வை

ஒத்திவைப்பு இல்லை… நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

நடத்தியே தீருவது என்று உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) இன்று வெளியிட்டுள்ளது. http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு இல்லை… நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்துக்கு சென்று, அட்மிட் கார்ட் என்று உள்ளதை கிளிக் செய்து, ரிஜிஸ்டிரேஷன் கீ வார்த்தை மற்றும் பாஸ்வோர்டை டைப் செய்து, அதை பதிவிறக்கம் மற்றும் பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.