இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியில்லை!

 

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியில்லை!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியில்லை!

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் துணிக் கடைகள் வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் தொற்று குறையாத கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது.