‘யாரும் பேசக்கூடாது’ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

 

‘யாரும் பேசக்கூடாது’ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேசிய கருத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் முகமாக விளங்கியவர் மஹேந்திர சிங் தோனி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலககோப்பையை வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது தோனியின் கேப்டன் ஷிப்

‘யாரும் பேசக்கூடாது’ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

டி20 முதல் உலககோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனும் மஹேந்திர சிங் தோனிதான். கடந்த 15-ம் தேதி சரியாக முன்னிரவு 7.29 மணிக்கு தனது ஓய்வை அறிவித்தார் தோனி.

தோனியின் ஓய்வு பற்றி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முஷ்டாக், ‘தோனியை இப்படி வழியனுப்பும் போட்டி நடத்தாது பிசிசிஐயின் தோல்வி’ என்பதாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

‘யாரும் பேசக்கூடாது’ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு

முஷ்டாக்கின் கருத்து பல இடங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. குறிப்பாக, பிசிசிஐ பற்றிய விமர்சனம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தர்மசங்கடத்தை அளித்தது. இதனால் புதிய முடிவு ஒன்றை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

பாகிஸ்தானின் இன்னாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்கள் பற்றிய கருத்து ஏதும் சொல்லக்கூடாது என்பதே அந்த முடிவு. இந்த முடிவை அனைத்து வீரர்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.