ஊட்டிக்கு யாரும் வராதீர்கள்… கலெக்டர் வேண்டுகோள்!

 

ஊட்டிக்கு யாரும் வராதீர்கள்… கலெக்டர் வேண்டுகோள்!


நீலகிரி மாவட்டத்துக்குள் வர இ-பாஸ் கட்டாயம் தேவை. சுற்றுலா தளங்கள் எதுவும் திறக்கப்படாது என்பதால் மக்கள் ஊட்டிக்கு வர வேண்டாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊட்டிக்கு யாரும் வராதீர்கள்… கலெக்டர் வேண்டுகோள்!


செப்டம்பர் 1 (இன்று) முதல் இ-பாஸ் தேவையில்லை, மாவட்டங்களுக்குள் போக்குவரத்து என்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் பழையபடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

ஊட்டிக்கு யாரும் வராதீர்கள்… கலெக்டர் வேண்டுகோள்!


இந்த நிலையில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “நீலகிரி மாவட்டத்துக்குள் வர இ-பாஸ் நடைமுறை தொடரும். எனவே, பிற மாவட்ட மக்கள் தேவையின்றி நீலகிரிக்கு வர வேண்டாம். உள்ளூர் மக்கள் இ-பாஸ் பெற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காட்டினால் போதும். அவர்களுக்கு மிக எளிதாக இ-பாஸ் வழங்கப்படும்.

ஊட்டிக்கு யாரும் வராதீர்கள்… கலெக்டர் வேண்டுகோள்!


நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் எதுவும் தற்போது திறக்கப்படாது. எனவே, சுற்றுலாவுக்காக பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம். அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே செல்ல இ-பாஸ் தேவையில்லை. மாவட்டத்துக்குள் 50 சதவிகித அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
தமிழகம் முழுவதும் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டாலும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதைத் தடுக்க இ-பாஸ் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தெரியாமல் பலரும் ஊட்டி, கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.