இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை- பிரதமர் மோடி அதிரடி

 

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை- பிரதமர் மோடி அதிரடி

இந்தியா – சீனா எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 76 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் லடாக் எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை- பிரதமர் மோடி அதிரடி

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. ராணுவ நிலையை கைப்பற்றவுமில்லை. நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட இழக்கப்படவில்லை.நாட்டின் ஒரு அங்குல நிலத்தின்மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும். ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது” என தெரிவித்துள்ளார்.