“எஸ்.பி.பி இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” : நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

 

“எஸ்.பி.பி இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” : நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“எஸ்.பி.பி இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” : நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் மட்டுமே நம்மை விட்டு சென்றுள்ளது. திரையுலகில் இருபெரும் நட்சத்திரமான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருக்கும் எஸ்பிபி தொழில் முறையிலும் சரி, நட்பு ரீதியாகவும் சரி மிகவும் நெருக்கம்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், “கடைசி நிமிடம் வரை உயிருக்காக போராடி எஸ்பிபி மறைந்துள்ளார். அவரின் மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.எஸ்.பி.பி-யின் பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இல்லை. எஸ்பிபி-யின் பாடலையும் குரலையும் விட அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடல்களை உருவாக்கியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.எஸ்பிபி-யின் கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.