“திமுகவை பூச்சாண்டித்தனத்தால் எவராலும் எதுவும் செய்துவிட முடியாது” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

“திமுகவை பூச்சாண்டித்தனத்தால் எவராலும் எதுவும் செய்துவிட முடியாது” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன.

“திமுகவை பூச்சாண்டித்தனத்தால் எவராலும் எதுவும் செய்துவிட முடியாது” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நேற்று முன்தினம் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றன.தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்பது நமது வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

“திமுகவை பூச்சாண்டித்தனத்தால் எவராலும் எதுவும் செய்துவிட முடியாது” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், ” திமுகவை பூச்சாண்டித்தனத்தால் எவராலும் எதுவும் செய்துவிட முடியாது. தமிழ் மக்களை திசை திருப்ப முடியாது. பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்புமிக்க வர்ணப்பூச்சுதான் புதிய கல்விக் கொள்கை. இன்னல் தரும் கல்விக்கொள்கை எதிர்ப்பிலும் வென்று சமூக நீதி காப்போம்; சமத்துவக் கல்வி வளர்ப்போம். கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறது மத்திய அரசு” என்று கூறியுள்ளார்.