100 நாட்களாக நோ கொரோனா…. முன்னோடியாக வழிகாட்டும் நியூசிலாந்து

 

100 நாட்களாக நோ கொரோனா…. முன்னோடியாக வழிகாட்டும் நியூசிலாந்து

உலகளவில் கொரோனா பாதிப்பு இரண்டு கோடி பேரைத் தொடவுள்ளது கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 591 பேர். இறப்போர் எண்ணிக்கை முந்தைய வாரங்களோடு ஒப்பிட்டுகையில் குறைவு என்றாலும் இதுவும் கவலை அளிக்கும் எண்ணிக்கையே.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 63 லட்சத்து 53 ஆயிரத்து 763 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

100 நாட்களாக நோ கொரோனா…. முன்னோடியாக வழிகாட்டும் நியூசிலாந்து

இந்த அதிர்ச்சி தரும் தகவல்களுக்கு இடையே நம்பிக்கை தரும் செய்தியை நியூசிலாந்து அரசு உலகிற்கு கூறியுள்ளது. ஆம், அந்த நாட்டில் புதிய கொரோனா நோயாளிகள் கடந்த 100 நாட்களில் யாரும் இல்லை என்பதே அந்தச் செய்தி.

நியூசிலாந்தில் தற்போதைய நிலவரப்படி 23 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் சிகிச்கைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், நாட்டில் வேறு யாருக்கும் கொரோனா தொற்றிவிடாதபடி மிகுந்த கவமாக இருக்கிறது அந்நாட்டி அரசு.

100 நாட்களாக நோ கொரோனா…. முன்னோடியாக வழிகாட்டும் நியூசிலாந்து

கொரோனா பாதிப்பு உள்ள நாடு அல்லது பாதிப்பு இல்லாத நாடு என எந்த நாட்டிலிருந்து நியூசிலாந்துக்குள் வந்தாலும் முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அடுத்து குறிப்பிட்ட நாள்கள் அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளே திணறி வரும் இந்தச் சூழலில், நியூசிலாந்து நாடு உலகிற்கே முன்னோடியாக வழிகாடி வருகிறது.