ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை! – தமிழக அரசு விளக்கம்

ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை! – தமிழக அரசு விளக்கம்

ராயபுரம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு புதிதாக யாருக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை! – தமிழக அரசு விளக்கம்

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்குள்ள அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு விசாரணையை மேற்கொண்டது. குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து அரசின் நிலை என்ன, இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பியது.

ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை! – தமிழக அரசு விளக்கம்
இந்த வழக்கில் தமிழக அரசு ஒன்று பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், “சென்னை ராயபுரம் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகளும் குணமடைந்துவிட்டனர். புதிதாக காப்பகத்தில் எந்த குழந்தைக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை. தமிழகத்தில் உள்ள வேறு எந்த ஒரு காப்பகத்திலும் உள்ள குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளது.