சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற அனுமதி பெறத் தேவையில்லை! – உயர் நீதிமன்றம் கருத்து

 

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற அனுமதி பெறத் தேவையில்லை! – உயர் நீதிமன்றம் கருத்து

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் நீதிமன்ற காவலில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும், அதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற அனுமதி பெறத் தேவையில்லை! – உயர் நீதிமன்றம் கருத்துசாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை, மகனைத் தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் கோரி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற அனுமதி பெறத் தேவையில்லை! – உயர் நீதிமன்றம் கருத்துநாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டியது இல்லை என்று கூறியுள்ளது.