அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் 31-ஆம் தேதி பணிக்கு வரவேண்டாம்: மத்திய அரசு

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் 31-ஆம் தேதி பணிக்கு வரவேண்டாம்: மத்திய அரசு

கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மார்ச் 25ம் தேதி முதல், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. இதையடுத்து மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் 31-ஆம் தேதி பணிக்கு வரவேண்டாம்: மத்திய அரசு

இந்நிலையில் கர்ப்பணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியில் இருந்தால், அவர்கள் அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை. வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதேபோல் இதய நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற தீவிர நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு வரும் பணியாளர்கள் சரியான பணி நேரத்துக்கு உள்ளே வந்து, சரியான நேரத்துக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்டமாக நின்று ஊழியர்கள் பேசுவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் அறிவுறுத்த உத்தரவிடப்படுகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு தரப்பினரும், காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒரு தரப்பினும் பணிக்கு வரலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.