இ-பாஸ் தேவையில்லை! தமிழக அரசு விளக்கம்

538

அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ-பாஸ் தேவையில்லை! தமிழக அரசு விளக்கம்

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதுமட்டுமின்றி இ.பதிவு முறை வரும் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் இ-பாஸ் தேவையில்லை எனவும் https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதுமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. https://eregister.tnega.org என்ற தளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.