கோயில்களில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு… தமிழக அரசு விதித்த முக்கிய கட்டுப்பாடு!

கோயில்களில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு… தமிழக அரசு விதித்த முக்கிய கட்டுப்பாடு!

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வந்துவிட்டதால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோயில் திருவிழாக்கள், மதம் சம்பந்தமான கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்து சமய அறநிலைய துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடனும் பக்தர்கள் நலன் கருதியும் கோயில் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்களில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு… தமிழக அரசு விதித்த முக்கிய கட்டுப்பாடு!

இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று (ஏப்ரல் 10) முதல் தடை விதிக்கப்படுகிறது. கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

கோயில்களில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு… தமிழக அரசு விதித்த முக்கிய கட்டுப்பாடு!

ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. கோயில்களில் உள்ள திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.