கொரோனா பரவல் எதிரொலி: பெட்ரோல் நிலையத்தில் புதிய கட்டுப்பாடு

 

கொரோனா பரவல் எதிரொலி: பெட்ரோல் நிலையத்தில் புதிய கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி: பெட்ரோல் நிலையத்தில் புதிய கட்டுப்பாடு

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாளை மறுநாள் முதல் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது எனவும் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதேபோல் மக்கள் அதிகம் கூடும் மால்கள், வணிக நிறுவனங்களிலும் கொரோனா பெருந்தொற்றை தடுத்து நிறுத்தும் நோக்கில் “No mask, No service” திட்டத்தை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.