எந்த கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை; ஆனால் மனிதன் …வேதனை தெரிவித்த நீதிபதிகள்

எந்த கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை; ஆனால் மனிதன் …வேதனை தெரிவித்த நீதிபதிகள்

சாலைகளை ஆக்கிரமித்து கோவில் கட்ட வேண்டும் என்று எந்த மதக் கடவுளும் மனிதனிடம் கேட்பது இல்லை. ஆனால் மதத்தின் பெயரை எந்தெந்த வகைகளில் எல்லாம் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் மனிதர்கள் தவறாக பயன் படுத்துகின்றனர். இப்படி தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

எந்த கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை; ஆனால் மனிதன் …வேதனை தெரிவித்த நீதிபதிகள்

சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் கடைகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருபாகரன் -தமிழ்ச்செல்வி அமர்வு இந்த வேதனையை தெரிவித்தது.

நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து மனுதாரர் தெரிவித்து தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை ஆய்வுசெய்து மாநகராட்சி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கின் மறு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.