8 வழிச்சாலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி வேண்டாமா? – கனிமொழி கண்டனம்

 

8 வழிச்சாலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி வேண்டாமா? – கனிமொழி கண்டனம்

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்; போராட்டக் களத்திலும் குதித்தனர்.

இதற்கான எதிர்ப்பு போராட்டம் பல இடங்களில் நடந்தது. நிலத்தில் கல் பதிக்கக்கூடாது என துணிவோடு நின்ற மூதாட்டியின் படம் எல்லோரையும் அசைத்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வளர்மதி, எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு துண்டறிக்கை வழங்கினார் என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

8 வழிச்சாலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி வேண்டாமா? – கனிமொழி கண்டனம்

எட்டு வழிச்சாலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி வேண்டும் என்பது முந்தைய நிலை. அதை மாற்றி, இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை பகிர்ந்து கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் திமுகவின் மகளிரணி செயலாளரரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சேலம் 8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான விளை நிலங்களை இழப்பதோடன்றி, காடுகளும் அரிய வகை உயிரினங்களும் அழிக்கப்படும் இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா ?’ என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் எட்டு வழிச்சாலை குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.