ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குள் வாடகை வாகனங்கள் இயங்க  இ- பாஸ் தேவையில்லை!

 

ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குள் வாடகை வாகனங்கள் இயங்க  இ- பாஸ் தேவையில்லை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு பொது முடக்கம் நாளை நள்ளிரவோடு முடிவடையும் நிலையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குள் வாடகை வாகனங்கள் இயங்க  இ- பாஸ் தேவையில்லை!

சென்னையில் 6ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து தொடர்பான  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன்,  “ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குள் வாடகை வாகனங்கள் இயங்க  இ- பாஸ் தேவையில்லை.  சென்னை உள்ளே வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்கலாம் போலி இ பாஸ் தகவல் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், சென்னையில் திங்கள் முதல் சிக்னல்கள் இயங்கும்” என தெரிவித்தார்.