சேவாக்கின் லெவன் டீமில் CSK வீரர் எவருமில்லை? மற்றவர்களின் விபரம் இதோ..

 

சேவாக்கின் லெவன் டீமில் CSK வீரர் எவருமில்லை? மற்றவர்களின் விபரம் இதோ..

ஐபில் என்பது பெரும் திருவிழா. அது முடிந்தாலும் அதனை பற்றிய பேச்சுகள் முடிவதில்லை. இன்றும் இந்த சீசனில் யார் நன்றாக விளையாடினார்கள்… யார் மோசம் என்று ரசிகர்கள் சோசியன் மீடியாவில் அலசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவேளை ஆஸ்திரேலியாவோடு இந்திய கிரிக்கெட் அணி மோதும் நாள் வரை இந்தப் பேச்சு ஓடும்போல.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளைச் சேர்ந்து 16 ஆயிரம் ரன்களைக் கடந்தவர். இரண்டிலும் சேர்த்து 38 சதங்கள் விளாசியவர். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியில் ஐந்து ஆண்டுகளும் பஞ்சாப் அணியில் இரண்டு ஆண்டுகளும் விளையாடியவர்.

சேவாக்கின் லெவன் டீமில் CSK வீரர் எவருமில்லை? மற்றவர்களின் விபரம் இதோ..

வீரேந்திர சேவாக், தனது ஐபிஎல் லெவன் டீம் ஒன்றைத் தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டிருக்கிறார். சேவாக் ஓப்பனிங் வீரர். அவர் ஓப்பனிங் வீரர்களாகத் தேர்ந்தெடுத்திருப்பது கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் (இவர் இந்த சீசனில்தான் அறிமுகமானார்) ஒன் டவுண் சூர்யகுமார். நிச்சயமாக இவர் பலரின் விருப்ப அணிகளில் இடம் பிடித்துள்ளார். நம்பிக்கை அளிக்கும் பேட்ஸ்மேன்.

அடுத்து விராட் கோலியும் டேவிட் வார்னரும் இருக்கிறார்கள். ஓப்பனிங் இறங்கும் வார்னரை ஐந்தாம் பேட்ஸ்மேனாக இறக்குவதற்கு தேர்வு செய்திருப்பது ஆச்சர்யம்தான். அதைவிட ஆச்சர்யம் ஆறாம் இடத்தில் டி வில்லியர்ஸ் இருப்பது. பவுலிங்கில் பும்ரா, ரபாடா, ரஷித் கான், முகம்மது ஷமி, சஹல் ஆகியோரைத் தேர்வு செய்திருக்கிறார். நிச்சயமாக நல்ல அணியே.

சேவாக்கின் லெவன் டீமில் CSK வீரர் எவருமில்லை? மற்றவர்களின் விபரம் இதோ..

சேவாக்கின் கனவு அணியில் CSK வீரர் ஒருவர்கூட இடம்பெறாதது ஆச்சர்யமாக இருக்கிறது. சேவாக்கே சென்னையின் கேப்டனாக வரும் சூழல் இருந்தது நமக்குத் தெரியும். இருந்தும் ஒருவர் கூட அவர் அணியில் இல்லை என்பது அதிர்ச்சியே. ஜடேஜா, ருத்ராஜ் கெய்க்வாட் இருவருமே நன்றாக விளையாடியிருந்தார்கள்.