கொரோனா வைரஸ் இன்னும் கால் வைக்காத இந்திய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்….

 

கொரோனா வைரஸ் இன்னும் கால் வைக்காத இந்திய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்….

நம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் தொற்று நோயான கொரோனா வைரஸ் தீவிரவமாக பரவி வருகிறது. இருந்தாலும், நாகலாந்து மாநிலத்திலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இன்னும் ஒரு நபருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. லட்சத்தீவை பொறுத்தவரை அது ஒரு தீவு கூட்டமாக புவியியல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இன்னும் கால் வைக்காத இந்திய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்….

அதேசமயம் நாகலாந்தில் கொரோனா வைரஸ் இல்லாததுதான் பெரிய விஷயம். கடந்த ஏப்ரல் மாதத்தில் திமாபூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து அசாமின் கவுகாத்தியில் உள்ள மருத்து கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செயல்பட்டார். அதன்பிறகு அவரும் குணம் அடைந்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாகலாந்து அரசு அசாமுடன் எல்லைகளை சீல் வைத்தது மற்றும் வெளிமாநிலங்களில் வேலைபார்க்கும் நாகலாந்து மக்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்புவதை தடுக்கும் நோக்கில், வெளிமாநிலங்களிலே தங்குபவர்களுக்கு ரொக்க சலுகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.

கொரோனா வைரஸ் இன்னும் கால் வைக்காத இந்திய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்….

கடந்த வாரம் வரை நாகலாந்தில் ஒரு கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம்தான் கோஹிமாவில் புதிதாக கொரோனா பரிசோதனை மையத்தை அம்மாநில அரசு திறந்தது. தற்போது ரயில் மற்றும் விமான சேவைகள் படிப்படியாக தொடங்கப்படுவதுடன், சொந்த மாநிலத்துக்கு திரும்புவோருக்கான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை திறக்க நாகலாந்து அரசு இப்போது போராடி வருகிறது. சிகப்பு மண்டலங்களிலிருந்து வருபவர்கள் திமாபூர் அல்லது கோஹிமாவில் சோதனையிடப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுகிறார்கள்.