கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை – ராதாகிருஷ்ணன் தகவல்!!

 

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை –  ராதாகிருஷ்ணன் தகவல்!!

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை –  ராதாகிருஷ்ணன் தகவல்!!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் நேற்று நடந்த 2ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16லட்சத்து 43ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை –  ராதாகிருஷ்ணன் தகவல்!!

இந்நிலையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி முகாமிற்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது தமிழகத்தில் மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தி உள்ளது. தமிழகத்தில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் தீர்ந்து விட்டது. தற்போது தமிழகத்தில் தடுப்பூசிகள் இல்லை கூடுதல் தடுப்பூசிகளைப் தருமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. எனவே உடனே தடுப்பூசிகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் ” என்றார்.