சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை- மாநகராட்சி

 

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை- மாநகராட்சி

தடுப்பூசி இல்லாத காரணத்தினால் சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை- மாநகராட்சி

சென்னையில் கொரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது.

சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று வரை 26,37,620 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி முகாம் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையத்தில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.