கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாநகரானது சென்னை

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாநகரானது சென்னை

நோய்த்தொற்று குறைந்ததின் எதிரொலியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமாக சென்னை மாறியுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாநகரானது சென்னை

சென்னை மாநகரில் கொரோனா தொற்று பரவலின் வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட பேருக்கு தொற்று உறுதியானால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கண்சமாக குறைந்துள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,446 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், எந்த ஒரு பகுதியிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இல்லாததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமாக மாறியுள்ளது சென்னை மாநகராட்சி. தற்போதைய நிலவரப்படி 132 இடங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளதாகவும் ஒவ்வொரு இடத்திலும் ஐந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தொற்று உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதிப்புகள் உள்ள குறிப்பிட்ட இடங்களில் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு தளர்வுகளில் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.