முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பம் ஏதும் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி பேட்டி!

 

முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பம் ஏதும் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி பேட்டி!

அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை என எம்.பி வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணி தொடங்கிய முதலே, அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி கேள்வி எழுந்தது. அண்மையில் இந்த பிரச்னை பரபரப்பாக பேசப்பட்டதால் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் தேர்தல் நேரத்தில் இதனை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன் பிறகும் கூட இந்த விவகாரம் ஓய்ந்ததாக இல்லை. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் பிரச்னையால் அதிமுக இரு பிரிவாக இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு சரியானதாக இல்லை என கருதிய அதிமுக தலைமை, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி இன்று செயற்குழு கூட்டத்தை கூட்டியது.

முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பம் ஏதும் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி பேட்டி!

அந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு புறம் தங்களது ஆதரவை தெரிவிக்க, அவர்கள் இருவருக்குமே தனிப்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதாவது, பிரதமரே தனது ஆட்சியை பாராட்டியதாகவும் கொரோனா காலத்திலும் தான் சிறப்பாக செயல்பட்டதாகவும் சசிகலாவால் தான் இரண்டு பேருமே தேர்வு செய்யப்பட்டோம் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டம் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நிலையில், சுமார் 3 மணி அளவில் நிறைவடைந்ததையடுத்து வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கே.பி முனுசாமி அறிவித்தார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பம் ஏதும் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி பேட்டி!

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்.பி வைத்திலிங்கம், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சியில் குழப்பம் ஏதும் இல்லை என்றும் மகிழ்ச்சியான அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்தார். மேலும், அனைவரின் மனதும் கோனாத வகையில் கட்சியின் நலன் கருதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வரும் என்றும் கூறினார்.