நம்பிக்கை வாக்கெடுப்பு : நாராயணசாமி அரசு தப்புமா?

 

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாராயணசாமி அரசு தப்புமா?

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாராயணசாமி அரசு தப்புமா?

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 18 ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணி பலம் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் 14 ஆக குறைந்தது. காங்கிரஸ் கூட்டணியில் 14 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து திமுக எம்எல்ஏ ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார்.இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி 12 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இழந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாராயணசாமி அரசு தப்புமா?

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புகாக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாராயணசாமி அரசு தப்புமா?

சட்டப்பேரவை நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் பலம் 12 ஆகவும், என்ஆர் காங்கிரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும் உள்ளது. நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் என 14 பேரின் ஆதரவு எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நாராயணசாமி அரசு தப்புமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.