நீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றமில்லை!

 

நீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றமில்லை!

நுழைவுத் தேர்வுகளான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை என தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வுகளை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தேர்வு முகமை தெரிவித்துவிட்டது. வேறு வழியில்லாமல் மாணவர்கள், கொரோனா பீதியிலேயே தேர்வெழுதினர். அதற்கான முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றமில்லை!

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த நுழைவுத்தேர்வுகளில், இந்த முறை கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு நீட் பாடத்திட்டங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. இந்த நிலையில், பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனினும் ஜே.இ.இ தேர்வு எழுதும் மாணவர்கள் 90 கேள்விகளில் இருந்து 75 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும் என்றும் இயற்பியல், வேதியியல், கணித பிரிவில் கேட்கப்படும் 90 கேள்விகளில் தலா 25 வீதம் 75க்கு விடையளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.