தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, அந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவித்த சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், அது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து கொரோனா பாதிப்பால் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி ஜெ, அன்பழகன் மரணமடைந்த நிலையில் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
பிப்ரவரி 27, 28 காலியானதாக அறிவித்த இரண்டு தொகுதிகளுக்கும் ஆகஸ்ட் 26 ,27க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா சூழல் காரணமாக தற்போது தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக செப்டம்பர் 7-ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும் அதன்பிறகு சூழ்நிலையைப் பொறுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.