பிளாஸ்மா தெரபியில் புண்ணியம் இல்லை- ஐசிஎம்ஆர்

 

பிளாஸ்மா தெரபியில் புண்ணியம் இல்லை- ஐசிஎம்ஆர்

மிதமானது முதல் தீவிரமான கொரோனா நோயாளிகளில் இறப்பு விகித்தை குறைக்க பிளாஸ்மா தெரபி பயன்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த ஒரு நோயாளியிடம் இருந்து ரத்தத்தை எடுத்து மற்றொரு கொரோனா தொற்று நோயாளிக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடம்பில் செலுத்தப்படும் ரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை அழிக்கின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கி நடைமுறைக்கு கொண்டு வந்தன.

பிளாஸ்மா தெரபியில் புண்ணியம் இல்லை- ஐசிஎம்ஆர்

இந்நிலையில் 39 மருத்துவமனைகளில் 464 கொரோனா நோயாளிகளிடம் 350 மருத்துவர்கள் வாயிலாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய பிளாஸ்மா தெரபி சிகிச்சை ஆய்வில் இம்முறை கைக்கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மிதமான அல்லது தீவிர தொற்றால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கிறதே தவிர பிளாஸ்மா தெரபியால் குறைக்க இயலவில்லை என்றும், இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ இதழால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.