மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு இல்லை: புதுச்சேரி முதல்வர் வேதனை!

 

மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு இல்லை: புதுச்சேரி முதல்வர் வேதனை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. புதுச்சேரியில் 5,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டனர். எஞ்சியுள்ளவர்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், காங்கிரஸ் எம்.பி ஜெயகோபாலன் உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதியானது.

மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு இல்லை: புதுச்சேரி முதல்வர் வேதனை!

இவ்வாறு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததால் ஏனாம் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்ககம் அமல்படுத்தப்பட்டது. அதே போல, எல்லா செவ்வாய் கிழமைகளிலும் புதுச்சேரியில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களின் போதிய கொரோனா விழிப்புணர்வு இல்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுபொதுமுடக்கம் அமலாகும் என்று எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, அரசு சார்புடைய தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா காணும் விதமாக கிரண்பேடி செயல்படுவதாகவும் தொழிலாளர்கள் பக்கம் புதுச்சேரி அரசு இருக்கிறது என்றும் எந்த ஆலையையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் கூறினார்.