என்.எம்.டி.சி. லாபம் ரூ.533 கோடி… லாக்டவுனால் லாபம் 55 சதவீதம் குறைந்தது….

என்.எம்.டி.சி. லாபம் ரூ.533 கோடி… லாக்டவுனால் லாபம் 55 சதவீதம் குறைந்தது….

என்.எம்.டி.சி. நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.533 கோடி ஈட்டியுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான என்.எம்.டி.சி. நிறுவனம் தாது உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் என்.எம்.டி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.533 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 55 சதவீதமாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,179 கோடி ஈட்டியிருந்தது.

என்.எம்.டி.சி. லாபம் ரூ.533 கோடி… லாக்டவுனால் லாபம் 55 சதவீதம் குறைந்தது….
என்.எம்.டி.சி.

2020 ஜூன் காலாண்டில் என்.எம்.டி.சி. நிறுவனத்தின் வருவாய் ரூ.1,938 கோடி ஈட்டியுள்ளது. அதேசமயம் 2019 ஜூன் காலாண்டில் என்.எம்.டி.சி. நிறுவனத்தின் வருவாய் ரூ.3,264 கோடியாக உயர்ந்து இருந்தது. என்.எம்.டி.சி. நிறுவனத்தின் கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவு குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுமிட் தேப் கூறியதாவது:

என்.எம்.டி.சி. லாபம் ரூ.533 கோடி… லாக்டவுனால் லாபம் 55 சதவீதம் குறைந்தது….
சுமிட் தேப்

தொற்றுநோய் முன்எப்போழுதும் இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கும் இது கடினமான ஆண்டு. நாங்கள் சவால்களை சந்தித்து வரும் போதிலும் எங்களது செயல்பாடுகள் நிலையாக இருப்பதில் நான் மிகிழ்ச்சி அடைகிறேன். நிலைமைகள் இயல்பாக்கப்படுவதால் வரும் காலாண்டுகளில் எங்களது செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்போம் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.