வங்கக்கடலில் உருவானது ‘நிவர்’ புயல்: உஷார் நிலையில் தமிழகம்!

வங்கக்கடலில் உருவானது ‘நிவர்’ புயல்: உஷார் நிலையில் தமிழகம்!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றது.

வங்கக்கடலில் உருவானது ‘நிவர்’ புயல்: உஷார் நிலையில் தமிழகம்!

தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்க கடலில் உருவானது. சென்னைக்கு அருகே 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக வே நெவர் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவானது ‘நிவர்’ புயல்: உஷார் நிலையில் தமிழகம்!

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தியாகராயநகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கொட்டிவாக்கம்,திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பெய்து வருகிறது. பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவானது ‘நிவர்’ புயல்: உஷார் நிலையில் தமிழகம்!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் 7 மாவட்டங்களில் மதியம் முதல் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.