நிவர் புயலும் – தமிழக புயல் அச்சமும்!

 

நிவர் புயலும் – தமிழக புயல் அச்சமும்!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தற்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நிவர் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் வலுவிழந்தால், வேதாரண்யம் – காரைக்கால் இடையே 24ஆம் தேதி முதல் 25ம் தேதிக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுகள் கூறுகின்றனர்.

நிவர் புயலும் – தமிழக புயல் அச்சமும்!

இதனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை வலுவானதாக இருந்தால் 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும், காரைக்கால் – சென்னை இடையே 80 சதவீதம் கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக டெல்டா மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

கஜா புயல்

நிவர் புயலும் – தமிழக புயல் அச்சமும்!


கடந்த 2018 ஆம் ஆண்டில், நவம்பர் 15 ஆம் தேதி டெல்டா மாவட்டத்தை தாக்கிய கஜா புயலின் கோரம் இன்னனும் மக்களின் மனதை விட்டு அகலவில்லை என்றே சொல்லலாம். நாகை , திருவாரூர், புதுகோட்டை மாவட்டங்களில் கஜா உருவாக்கிய கோரத்தாண்டவத்தில் இருந்து இப்போதுவரை மக்கள் மீளவில்லை. அந்த புயல் ஏற்படுத்திய கோரத்தாண்டவம் மிகக்கொடூரமாக இருந்தது. தென்னை மர தோப்புகள், விவசாய பயிர்கள், மக்களின் உடமைகள், ஆடு மாடுகள் என ஒன்றையும் மிச்சம் வைக்காமல் கஜா புயல் துறைத்து அழித்துச் சென்றது. தொலைதொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதால், புயல் தாக்கிய அடுத்த இரண்டு நாட்கள் அந்த பகுதிகளில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. புயலின் பாதிப்புகள் வெளி உலகத்துக்கு தெரிய வரை இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆனது. மின் கம்பங்கள் உடைந்து சேதமடைந்ததால், மக்கள் சுமார் ஒரு மாதத்துக்கு மேம் மின்சாரம் இல்லாமல் இருளில் வாழ பழகியிருந்ததன. நிவாரண மையங்களிலும், உதவி மையங்களிலும் மக்கள் ஒரு மாதத்துக்கு மேல் தங்கி இருக்கும் நிலை உருவானது. உலகுக்கே உணவிட்ட டெல்டா மக்கள் ஒருவேளை உணவுக்காக சாலைகளில் கையேந்தி நின்ற காட்சிகள் காலம் மறக்காது.

தானே புயல்

நிவர் புயலும் – தமிழக புயல் அச்சமும்!

அதுபோல கடந்த 2011 ஆண்டில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் சேதத்தை உருவாக்கிய தானே புயல் பாதிப்பும் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக துறைத்து அழித்தது. சுமார் 45க்கும் அதிகமானோர் புயல் மழையில் சிக்கி உயிரிழந்தனர். பலா, முந்திரி மரங்கள் அடியோடு அழிந்ததால், மக்களின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுதில் இருந்தும் நீண்ட உதவிக்கரங்கள்தான் அந்த மக்களை பாதுகாத்தது என்றே சொல்லலாம்.

வர்தா புயல்

நிவர் புயலும் – தமிழக புயல் அச்சமும்!

2015 ஆம் ஆண்டில் சென்னையில், ஏற்பட்ட மழை வெள்ளம், 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கிச் சென்றது. பேருந்து, ரயில் சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து, வெள்ளம் வெளியேறியதால், சென்னை நகரமே வெள்ளக்காடானது. அதுபோல கடந்த 2016 ஆம் ஆண்டில் சென்னையை தாக்கிய வர்தா புயல் மிக மோசமாக பாதிப்புகளை உருவாக்கிச் சென்றது. தொலைத் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டன. அடையாறு கரையோர மக்கள் பல நாட்கள் சுகாதார மையங்களில் தங்கி இருந்தனர். இந்த புயலால் சென்னை நகரம் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பை கண்டது.

ஒக்கி புயல்

நிவர் புயலும் – தமிழக புயல் அச்சமும்!


2017 ஆம் ஆண்டில் உருவான குமரி மாவட்ட கடலோர பகுதியை தாக்கிய ஒக்கி புயல், அதிக மனித இழப்புகளை ஏற்படுத்தி, இன்னமும் ஆறாத வடுவை விட்டுச் சென்றுள்ளது. புயல் வருவதை அறியாமல் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 300 பேருக்கு அதிகமாக உயிரிழந்தனர். சுமார் 600 பேருக்கு மேல் காணவில்லை. மிகப்பெரிய பொருளாதார சேதங்களையுமொக்கி ஏற்படுத்திச் சென்றது. பருவ மழை காரணமாக , தமிழகத்துக்கு அதிக மழை பொழிவு கிடைத்தாலும், தானே, கஜா என ஒவ்வொரு ஆண்டும் புயல் ஏற்படுத்திச் செல்லும் பாதிப்புகளும் மிகப்பெரிய சேதத்தை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம்.