நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்- பேரிடர் மீட்புப்படை இயக்குநர்

நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்- பேரிடர் மீட்புப்படை இயக்குநர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையைக்கடக்கவிருக்கிறது. தற்போது புயலானது கடலூரில் இருந்து 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ தொலைவிலும், சென்னையிருந்து 185 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் எதிரொலியால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் ஏரிகள் நிரம்பிவழிகின்றன. இதனால் கரையோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும்பணியில் மீட்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்- பேரிடர் மீட்புப்படை இயக்குநர்

நிவர் புயல் நகரும் வேகம் குறைந்தது. சென்னையில் இருந்து 185 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கவுள்ளதாக பேரிடர் மீட்புப்படை இயக்குநர் தெரிவித்துள்ளார்.