5 கி.மீ வேகத்தில் நகரும் ‘நிவர்’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

5 கி.மீ வேகத்தில் நகரும் ‘நிவர்’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் வேகம் 5 கி.மீ ஆக அதிகரித்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ வேகத்தில் நகரும் ‘நிவர்’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், வங்கக்கடலில் ‘நிவர் புயல்’ உருவாகியுள்ளது. இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு வேண்டாம் என்றும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருவதோடு, தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் இருக்கிறது.

5 கி.மீ வேகத்தில் நகரும் ‘நிவர்’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் வேகம் 4 கி.மீ வேகத்தில் இருந்து 5 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 450 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு அருகே 410 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் என்றும் நாளை மாலை அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.